ஸ்டீல், அலுமினிய பாத்திரங்களுக்கு ISI முத்திரை கட்டாயம்!
துருப்பிடிக்காத எஃகு (Stainless Stee) மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு ஐஎஸ்ஐ (ISI) முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேசிய தர தரநிலைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத எஃகு மற்றும் அலுமினிய சமையல் பாத்திரங்களின் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தர நிர்ணய நிறுவனம் (BIS) தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. BIS சமீபத்தில் சமையல் பாத்திரங்கள் தயாரிப்பது தொடர்பாக சில தரநிலைகளை வகுத்துள்ளது. பாத்திரங்கள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வடிவமைப்புகள் தொடர்பான பொருட்கள் இதில் அடங்கும்.