10-ஆம் வகுப்பு பையனுக்காக பெற்றோரை உதறிவிட்டு திருமணம் செய்து கொண்ட இளம் பெண்!
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு வரை படித்த மாணவனுக்காக, இளம் பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் படிப்பை உதறிவிட்டு வீட்டை வீட்டு ஓடிய சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் பொறியியல் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் மோகனப்பிரியா. சமூகவலைத்தளங்களில் எப்போதும் மூழ்கிடக்கும் இவருக்கு, பெங்களூரைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுந்தர் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
சமூகவலைத்தளத்தில் துவங்கிய இவர்களின் நட்பு, நாளைடைவில் காதலாக மாறியது. குடியாத்தத்தை சேர்ந்த சுந்தர் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பெங்களூரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.
சுந்தர் மீது அளவு கொண்ட காதல் கொண்ட மோகனப்பிரியா, கடந்த 15-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி, காதலனைத் தேடி சென்னை காட்பாடிக்கு சென்றுள்ளார்.
அதன் பின் அங்குள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற மகள் காணவில்லையே என்று பெற்றோர் பதறி போய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து பொலிசார் மோனப்பிரியாவின் செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அங்கு பொலிசார் மற்றும் பெற்றோர் சென்ற போது, மோகன்ப்பிரியா வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார்.
இதையடுத்து தனது மகளை கடத்தி வந்து விட்டதாக காதலன் சுந்தர் மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் மோகனப்பிரியாவின் பெற்றோர் மற்றொரு புகார் அளித்தனர்.
இதையடுத்து காதலனுடன் காவல் நிலையத்தில் ஆஜரான மோகனப்பிரியா, தான் மேஜர் என்பதால் காதலனுடன் தான் செல்வேன் என்று பெற்றோர் மற்றும் படிப்பை உதறிவிட்டு காதலனுடன் மோகன்ப்பிரியா சென்றுவிட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மோகன்ப்பிரியாவின் பெற்றோர், கண்ணீருடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.