100 பேருடன் சென்ற விமானம் ! பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது

பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் விமானம் ஒன்று என்ஜின் கோளாறு காரணமாக கட்டுப்பாடு இழந்து குடியிருப்பு பகுதியில் பயங்கரமாக மோதியது.
லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்ற ஏர்பஸ் ஏ320 விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தின் பைலட் கராச்சியில் உள்ள விமானப் போக்குவரத்து கண்ட்ரோல் மையத்திற்கு ஆடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இயந்திர கோளாறு மோசமானதால் குடியிருப்பு பகுதியில் விமானம் பயங்கரமாக மோதியது இந்த விமானத்தில் குழுவுடன் சேர்த்து 100 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை. குடியிருப்பு பகுதியில் மோதியதால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. சாலையில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் பெரிய புகை மண்டலம் உருவானது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானில் நடந்த இந்த விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தனர். மேலும் பல்வேறு நாட்டின் தலைவர்கள் பாகிஸ்தானில் நடந்த இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.