14 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய மளிகை கடைக்காரர் கைது.

திருச்செந்தூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய மளிகை கடை உரிமையாளரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பழையகாயல், காந்தி நகரைச் சேர்ந்தவர் நயினார் மகன் பட்டுராஜன் (42), இவர் அந்த ஊரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு வந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் தெரியவரவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பட்டுராஜனை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்