18 வயதிற்கு குறைவானவர்கள் பார்க்க முடியாது: ‘விடுதலை 2’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்..!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை 2’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எனவே திரையரங்கில் இந்த படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க முடியாது. மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் வரும் இருபதாம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் உள்பட சில முக்கிய நட்சத்திரங்கள் இணைத்துள்ள நிலையில், இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் அரசியல் மற்றும் கெட்ட வார்த்தை வசனங்களை நீக்கிவிட்டு “ஏ” சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, அனுராக் காஷ்யப், கிஷோர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.