ஹெல்மட் அணிந்து.., கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு துணிக்கடையை நோக்கி சுட்ட மர்ம நபர்கள் !!
டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் என்னும் பகுதியில் மர்மநபர்கள் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, டெல்லி காவல் துறை கூறுகையில், “ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் ஜவுளிக் கடையை நோக்கி தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 2 முறை சுட்டனர். அதன்பின் சாலைக்குச் சென்ற அந்த இருவரும் தங்கள் பைக்கில் ஏறி அமர்ந்து மீண்டும் 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்” என்றனர்.
இந்த தாக்குதல் குறித்துச் சம்பந்தப்பட்ட ஜவுளிக் கடையின் உரிமையாளர் ஷாபிர் கான் (வயது 50) கூறுகையில், நானும் என்னுடைய சகோதரரும் இந்த கடையை நடத்திவருகிறோம், ச,சம்பவத்தன்று “கடை வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் அமர்திருந்தபோது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் கடையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். நானும் எனது சகோதரரும் பயந்துபோய், கடைக்குள் ஓடிச் சென்று மறைந்து கொண்டோம்” என்றார்.
மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வந்தவர்கள் தங்கள் முகத்தை மறைத்து வந்துள்ளனர் என்பதும், அவர்கள் வந்த வாகனம் தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி வடகிழக்கு காவல்துறை கமிஷ்னர் வேத் பிரகாஷ் சூர்யா கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக் கடை உரிமையாளர் மீது முன்விரோதம் காரணமாக யாரேனும் இதைச் செய்திருக்கலாம் சந்தேகிக்கிறோம்” என தெரிவித்தார்.