உலக நாயகனின் ‘ஹே ராம்’ 20-வது ஆண்டு..!! சிறந்த காட்சிகளை கொண்டாடும் ரசிகர்கள் !!
இதே நாளில் பிப்.,18 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கமல்ஹாசன் மற்றும் ஷாருக் கான் நடித்த ஹேராம் திரைப்படத்தினை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
பிப்ரவரி 18-ஆம் 2000 ஆம் ஆண்டில் உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஹேராம்’. இதில் கமல் ஹாசனுடன் ஷாருக் கான், ராணி முக்கர்ஜி, வசுந்த்ரா தாஸ், ஹேமமாலினி, அதுல் குல்கர்னி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இந்தப்படத்திற்கு இசை அமைப்பதில் சில பிரச்சனைகள் எழுந்தது பின்பு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்தார். படத்தின் ரிலீஸ் போது பல சர்ச்சைகளைக், தடங்கல்கள் கிளம்பின, காலப்போக்கில் இதில் உள்ள கருத்துக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது வரவேற்கப்பட்டது. வசூலில் பெரிய அளவு இல்லாவிட்டாலும் பலருடைய பாராட்டைப்பெற்றது. தமிழ் சினிமாவிலும், சமூகத்திலும் “ஹே ராம்” இந்து – முஸ்லிம் அரசியலை பேசும் படமாகவும், காந்தியை சுட்டுக் கொன்றவரின் பின்னணியைக் சொல்லும் படம் என இந்த படத்தின் மீதான கருத்துக்கள் ஏராளம்.
தற்போது நடைமுறையில் உள்ள சமூகப் பிரச்சினைகளுடன் ஒத்துப்போகும் கமல் ரசிகர்கள் #20YearsOfHeyRam என்ற ஹாஷ்டேகினைப் பயன்படுத்தி ட்விட்டரில் படத்தின் சில காட்சிகளைப் பதிவிட்டும் கொண்டாடிவருகின்றனர்.
கமல் ஹாஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹே ராமின் 20 ஆண்டுகள். அந்த நேரத்தில் நாங்கள் இப்படத்தை செய்ததில் மகிழ்ச்சி. படம் பேசிய அச்சங்களும் எச்சரிக்கைகளும் தற்போது நிறைவேறிக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த சவால்களை நாட்டின் நல்லிணக்கத்திற்காக் நாம் சமாளிக்க வேண்டும். நாளை நமதே” என பதிவிட்டுள்ளார். இந்த #20YearsOfHeyRam ஹாஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.