சென்னையில் கோர விபத்து !! இருசக்கர வாகனத்தில் சென்ற 22 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார் !!
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி சாலை குடியிருப்பு, முதல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் இளம்பெண் சென்று சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக திடீரென ஒரு லாரி வேகமாக வந்து எதிர்பாராத விதமாக பெண்ணின் மீது மோதியது. லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட அந்த பெண்ணின் தலை, மார்பு, இருப்பு, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை நேரில் கண்ட பொதுமக்கள் பதறியடித்து அடிபட்ட அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை கொடுத்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.
இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண் ஆலந்தூர் பகுதியை சேர்ந்த ஷெர்லி மடோனா வயது 22 என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி பற்றிய எந்த அடையாளம் தெரியவில்லை என்பதால், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா உள்ள இடத்தில சிசிடிவி காட்சிகளை வைத்து லாரியையும் அதன் டிரைவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.