26-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி – மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்!

பிரதமர் மோடி வரும் மே 26-ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் மே 26ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களை காணொலி வாயிலாகவும் தொடங்கி வைக்கவுள்ளார்
பிரதமர் வருகையின்போது, அவரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.