26 இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி, சோதனைகளை விரைவுபடுத்த நடவடிக்கை

மும்பையில் உள்ள 26 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது இவர்களுக்கு எப்படி பரவியது என்பதை பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வெளியூரிலிருந்து சரக்கை சேமித்து வைக்கும் இடத்திலுள்ள நபர் ஒருவருக்கு இது பரவியுள்ளது. மேலும் இவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் மற்ற சிலருக்கும் இது பரவியுள்ளது.
இதை அறிந்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கடற்படை வீரர்கள் தங்கியிருக்கும் INS ANGRE குடியிருப்பு பிளாக் முற்றிலுமாக Containment zone என கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த குடியிருப்பு மும்பையில் கடற்படைத் தளத்திற்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நபருக்கு வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது பின்பு அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் 25 பேருக்கு இது பரவியுள்ளது.