3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய பாடகி!

June 17, 2024 at 11:58 am
pc

பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் இதய நோய்களுடன் போராடும் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் என்பவர் ‘Saving Little Hearts’ என்ற நிதி திரட்டும் அமைப்பின் மூலம் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இது தொடர்பாக பாடகி கூறும்போது, இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தற்போது இது தான் என் வாழ்க்கையின் லட்சியம் ஆகும்” என்று கூறினார்.

மேலும், தெருக்களில் பாடி கார்கில் வீரர்களுக்காக நிதி திரட்டிய தனது முதல் அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.

அண்மையில், இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த அலோக் என்ற சிறுவனின் வீடியோவை பகிர்ந்து பிரார்த்தனை செய்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதயக் கோளாறினால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பாடகியும், அவரது சகோதரர் பாலாஷ் முச்சால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் திரட்டிய நிதியை வைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றி வருகிறார். இவர், சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார்.

அதோடு இவரை இந்திய அரசு பிற பொது நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி அங்கீகரித்துள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website