பிளாஸ்டிக் பைகளில் எச்சை துப்பி வீடு வீடாக தூக்கிப்போட்டு செல்லும் கும்பல், கொரோனவை பரவ விடும் விஷமிகள்
ராஜஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் கோட்டா மாவட்டத்தில் உள்ள சில வீடுகளில் 4 – 5 பெண்கள் பிளாஸ்டிக் பைகளில் எச்சில் துப்பி வீடு வீடாக போட்டுவிட்டு செல்கின்றனர். இதனை சிசிடிவி கேமரா படம்பிடித்துள்ளது.
இது போன்று ஒரே தெருவில் இருந்த பல வீடுகளில் அவர்கள் இந்த வேலையைச் செய்துள்ளனர். இந்த நபர்களின் முகங்கள் சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் நிலவுவதால் மக்கள் ஒருவரை ஒருவர் விலகி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. எச்சில் மூலமாகவும், தும்மல் மூலமாக பரவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானில் நடந்த சம்பவம் கொரோனவை பரப்பி விடுவதற்காக தீய எண்ணம் உடைய பெண்கள் இது போன்று செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை பற்றி கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே தூய்மைப் பணியாளர்கள் வந்து சனிடைசர் போன்றவற்றை தெளித்து அப்புறப்படுத்தினர்.
தற்போது காவல்துறையினர் யார் இந்த வேலையை செய்தது என்பதை கண்டுபிடித்து அவர்களை விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தானில் தற்போதைய நிலவரப்படி 796 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.