500 கோடி செலவில் 9 நாள் ஆடம்பர திருமணம்.., கர்நாடக பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலுவின் வீட்டு கல்யாணம் !!

கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகள் ரக்ஷிதாவின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் விமரிசையாக 9 நாட்களாக நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2016ம் ஆண்டு ரூ.550 கோடி செலவில் பாஜவில் இருந்து விலகியிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி தனது மகளான பிரம்மனியின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தினார .
தற்போது இந்த வருடம் பாஜக.வை சேர்ந்த அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகள் ரக்ஷிதாவின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் தொடர்ச்சியாக 9 நாட்களுக்கு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான தடபுடலான ஏற்பாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
கல்யாணத்தின் சிறப்பம்சங்கள்:
ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு பேலஸ் மைதானத்தில் 40 ஏக்கர் நிலம் திருமணத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இது தவிர 27 ஏக்கர் நிலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் மற்றும் 15 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது.
சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் செந்தூரம்,குங்குமம், சந்தனம், அரிசி போன்றவை அடங்கிய திருமண அழைப்பிதழ் வடிவமைப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட டெல்லியை சேர்ந்த முன்னணி தலைவர்களுடன், கர்நாடகாவை சேர்ந்த அரசியல் முன்னணி தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
300 கலைஞர்கள் கடந்த 3 மாதங்களாக மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வடிவமைப்பு என்பது ஹம்பியில் இருக்கும் விருபாக்ஷி கோயிலை மாதிரியாக கொண்டு 4 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

பல்லாரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தும் பணியில் பாலிவுட் கலை இயக்குனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தனது மகளுக்கு ஒப்பனை செய்ய தீபிகா படுகோனின் மேக்கப் மேனை வர உள்ளார்.
அத்துடன், முகேஷ் அம்பானியின் மகள் ஈஷாவின் திருமணத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த ஜெயராமன் பிள்ளை மற்றும் திலீப் ஆகியோர் ரக்ஷிதாவின் திருமண நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பொறுப்பேற்றுள்ளனர்.
ஒரே பந்தியில் 7 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்யாணத்தின் செலவை கேட்ட பலர் ஆச்சிரியத்தில் உள்ளனர். இந்தியாவின் மிக பிரமாண்டமான திருமணத்தில் இந்த கல்யாணமும் இடம்பிடிக்கும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.