54 வயது கராத்தே மாஸ்டரின் பாலியல் சீண்டல்- பள்ளியில் 12 வயது சிறுமிக்கு நடந்த சோகம்.
பள்ளி விளையாட்டு அறையில் 12 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கராத்தே டீச்சர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது.
மும்பையில் உள்ள சியன் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 12வயது சிறுமியை பள்ளியில் உள்ள விளையாட்டு அறையில் தனியாக அழைத்து சென்று 54 வயதுடைய கராத்தே மாஸ்டர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து வீட்டிற்கு சென்று தந்து தாயிடம் அழுது நடந்ததை கூறியுள்ளார். பிறகு வீட்டிற்கு வந்து கராத்தே மாஸ்டர் சிறுமியின் கையை பிடித்து எதுவும் நடக்கவில்லை என மீண்டும் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்,
இந்த சம்பவம் மார்ச் 6ஆம் தேதி மாலை 2.35 முதல் 4 மணிக்கு இடையே நடந்துள்ளது. இதை கேட்டு அதிர்ந்து போன தாய் அருகில் உள்ள காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல் துறையினர் கராத்தே மாஸ்டர்-ஐ கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியில் சியன்-கொள்ளிவாடா என்னும் இடத்தை சேர்ந்தவர் எனவும் அவர் பெயர் விஸ்வநாத் கிருஷ்ணாசந்த் நாயக் என்பது தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் அவரை கைது செய்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.