6 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு ….தூக்கில் தொங்கிய தாய் ..!
ஆரணி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அமரேசன். இவர் அதே பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
இவருக்கும் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் சரண்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஆரணி பாளையம் கே.சி.கே நகரில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோசித்த மருத்துவர்கள் சரண்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சரண்யாவின் தந்தை ராஜா என்பவர் ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்