90ஸ் கிட்ஸ்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மீண்டும் வருகிறார் “சக்திமான்”
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளததை அடுத்து இந்தியர்கள் 130 கோடி பேர்களும் தற்போது வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் வீட்டில் இருக்கும் பொதுமக்களின் பொழுதுபோக்கை கணக்கில் கொண்டு சமீபத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.
33 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ராமாயணம் ஒளிபரப்பப்பட்டதால் மக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த இரண்டு சீரியல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை சுமார் 8 ஆண்டுகள் 520 எபிசோடுகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல் ’சக்திமான்’. இந்த சீரியல் தற்போது மீண்டும் ஒளிபரப்ப இருப்பதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த சக்திமான் தொடரின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் முகேஷ்கண்ணா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
தற்போது நடுத்தர வயதாக இருக்கும் பலர் இந்த சக்திமான் தொடரை தங்களுடைய சிறுவயதில் ரசித்து பார்த்து இருப்பார்கள். அவர்களுக்கு தற்போது மீண்டும் இந்த தொடரை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது மட்டுமின்றி இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கும் சக்திமான் தொடரை கண்டுகளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.