தொகுப்பாளரை கடத்தி சித்ரவதை செய்த பெண் தொழிலதிபர்!

February 26, 2024 at 11:18 am
pc

தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா என்ற இளைஞரை Hyderabad பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா கடத்தி சித்திரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31 வயதான பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா-வுக்கு(businesswoman Trisha Bhogireddy) திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், போகிரெட்டி திரிஷ்னா திருமண வரண் பார்க்கும் இணைய தளமான மேட்ரிமோனியல்(matrimonial website) பிரணவ் சிஸ்ட்லா என்ற இளைஞரின் புகைப்படத்தை பார்த்துள்ளார்.

அந்த இணையதளத்தில் இருந்த தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரணவ் சிஸ்ட்லாவின்(TV Anchor Pranav Sistla) தொலைபேசி எண்ணை எடுத்து போகிரெட்டி திரிஷ்னா பேசி பழகி வந்துள்ளார்.

இதற்கிடையில் தொழில் முதலீட்டிற்காக போகிரெட்டி திரிஷ்னா 40 லட்சம் ரூபாயை பிரணவ் சிஸ்ட்லாவுக்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா விசாரித்து பார்த்ததில், பிரணவ் பெயரில் மோசடி செய்தது சைத்தன்யா ரெட்டி என்பது தெரியவந்தது.

உடனே உண்மையான பிரணவ் சிஸ்ட்லாவை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை தெரிவித்து தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா எச்சரித்துள்ளார், மேலும் தனது காதலையும் திருமண விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரணவ் சிஸ்ட்லா தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னாவின் காதலையும், திருமண விருப்பத்தையும் ஏற்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரணவ் சிஸ்ட்லாவின் காரில் காரில் ஏர்டேக் என்ற ட்ராக்கிங் சாதனத்தை பொருத்தி சில நாட்களாக அவரை கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10ம் திகதி தனது நிறுவன ஊழியர்களை கொண்டு பிரணவ் சிஸ்ட்லா கடத்தி போகிரெட்டி திரிஷ்னா சித்ரவதை செய்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக பெண் தொழிலதிபருடன் உறவில் இருப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரணவ் சிஸ்ட்லா அளித்த புகாரின் பெயரில் போகிரெட்டி திரிஷ்னா மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website