சிம்புவை நோக்கி படை எடுக்கும் தயாரிப்பாளர்கள்.. சிங்கம் சிங்கில்லா விளையாடுது
சிம்பு என்றாலே வம்பு என்ற பழமொழியை மாற்றி தற்போது சிம்பு என்றால் அன்பு என்கிற ரேஞ்சுக்கு மாறி விட்டாராம் சிலம்பரசன். சபரிமலைக்கு சென்று வந்ததில் இருந்தே ஐயப்பன் போதி அருள்புரிந்து விட்டார் போல.
வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் 16 நாட்கள் தொடர்ச்சியாக எந்தவித தொந்தரவும் செய்யாமல் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவ்வப்போது ட்விட்டரில் சந்தோஷமாக சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதனைக் கேள்விப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களும் சிம்புவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். சிம்புவுக்கு ரசிகர்கள் பட்டாளம் முன்னணி நடிகர்கள் ரேஞ்சுக்கு ஏராளம். ஆனால் தன்னுடைய சோம்பேறி தனத்தினால் படங்களில் நடிக்காமல் இடைவெளி எடுத்துக் கொண்டார்.
தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்த சிம்புவை வைத்து படம் எடுக்க கிட்டத்தட்ட 10 தயாரிப்பாளர்கள் மாநாடு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளனர். அதற்கு காரணம் என்ன பிரச்சனை செய்தாலும் சிம்புவை விட்டு அவர்கள் ரசிகர்கள் விலகாததே. (10 தயாரிப்பாளர்கள் லிஸ்ட் பின்னர் அறிவிக்கப்படும்)
மாநாடு படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்கயிருப்பதாக சிம்புவின் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுமட்டும் உண்மையானால் இனி சிம்புவை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பது மட்டும் உறுதி என அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.