பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியையை புரட்டி எடுத்த பள்ளி முதல்வர் – அதிர்ச்சி Video!
பள்ளி முதல்வர்
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவின் சீகானா கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் முதல்வராக பெண் ஆசிரியை பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் கஞ்சன் சவுத்ரி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கஞ்சன் சவுத்ரி தொடர்ந்து ஒரு வாரமாக பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி முதல்வருக்கும் அந்த ஆசிரியைக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென பள்ளி முதல்வர் கஞ்சன் சவுத்ரியை தாக்கத் தொடங்கியுள்ளார்.
பரவும் வீடியோ
அதற்கு அந்த ஆசிரியை தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்தார். அப்போது பள்ளி முதல்வர் அவரது ஆடையை பிடித்தார். பதிலுக்கு அந்த ஆசிரியையும் பள்ளி முதல்வரின் ஆடையை பிடித்தார். உடனே அருகிலிருந்த சக ஆசிரியர்கள் இருவரையும் பிரித்தனர்.
இந்த கைகலப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் “மாணவர்களுக்கு ஒழுக்கங்களை கற்றுத்தரும் ஆசிரியர்களே பள்ளியில் இப்படி நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.