பல ஆண்டுகளாக ஒரே மொபைல் எண் வைத்திருந்தால் தனி கட்டணமா?
நீண்ட நாட்களாக செல்போன் எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வைத்திருந்தால் தனி கட்டணம் வசூலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமானோர் மொபைல்போன் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை முறைப்படுத்த பல்வேறு நெறிமுறைகளை டிராய் (TRAI) வகுத்து வருகிறது.
இந்நிலையில், செல்போனில் இரு சிம்கார்டுகளை வைத்திருப்ப்பவர்கள் ஒரு சிம் கார்டை மிகக் குறைந்த அளவில் மட்டும் பயன்படுத்துவார்கள்.
அதேபோல, சில நிறுவனங்களும் சில தொலைபேசி இணைப்புகளை அதிகம் பயன்படுத்தாமல் மிக குறைந்த அளவில் பயன்படுத்துவார்கள்.
இந்த மாதிரியான செல்போன் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களுக்குத் தனியாக கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த செய்தியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் மறுத்துள்ளது.
அதாவது, ஒரு செல்போன் எண் அல்லது இரு சிம்கார்டுகளை வைத்திருப்பதற்கோ, தொலைபேசி எண்களை வைத்திருப்பதற்கோ பிரத்யேகக் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இல்லை என்று TRAI விளக்கம் கொடுத்துள்ளது.