முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென் ஆப்பிரிக்கா! ஆப்கானை 56 ரன்னுக்கு சுருட்டி இமாலய வெற்றி
டி20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
முதல் அரையிறுதிப் போட்டி
டிரினிடாட்டின் பிரைன் லாரா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியமுதல் டி20 உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்று ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஜென்சென் பந்துவீச்சில் குர்பாஸ் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, குல்பதின் நைப் 9 ஓட்டங்களில் அவரது ஓவரிலேயே கிளீன் போல்டு ஆனார். ரபாடாவின் மிரட்டல் பந்துவீச்சில் இப்ராஹிம் ஜட்ரான் போல்டு ஆகி வெளியேற, அதே ஓவரில் நபி டக்அவுட் ஆனார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
அதன் பின்னர் ஷம்ஸியின் மாயாஜால சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ச்சி அடைய, ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் முதல் முறையாக டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறியது.