மாணவர்களுக்கு பாராட்டு விழா!!அதிகாலையிலே வருகை தந்த நடிகர் விஜய்..

June 28, 2024 at 9:30 am
pc

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு நடத்தப்படும் பராட்டு விழா இன்று ஆரம்பமாகிறது.

பாராட்டு விழா

10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவை தமிழக வெற்றிக் கழகம் நடத்துகிறது.

குறித்த பாராட்டு விழாவானது இன்று 28 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. 

அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய விழாவில் பங்கேற்றுக்கொள்வார்கள்.

வெளி இடங்களில் இருந்து வருபவர்களுக்கு கட்சியே வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவாக சாதம், கதம்ப சாம்பார், வத்தக்குழம்பு, தக்காளி ரசம், மோர், உருளை காரக்கறி, அவரை மணிலா பொரியல், அவியல், இஞ்சி துவையல், ஆனியன் மணிலா, தயிர் பச்சடி, அப்பளம், வடை, வெற்றிலை பாயாசம் என்பவை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் அதிகாலையே மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார்.

காலையிலேயே வருகை தந்த நடிகர் விஜய்

கட்சி ஆரம்பித்ததற்கு பின் நடிகர் விஜய் நடத்தும் முதல் விழா என்பதால், நடிகர் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் பொன்னாடை போர்த்தி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

குறித்த விழாவானது இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு முதல் முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி அளவில் மாணவர்களிடையே 10 நிமிடம் விஜய் உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் வருவதற்கு முன்பே நடிகர் விஜய் மண்டபத்திற்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website