மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கே டீஸர்… வாத்தியாரு வெறித்தனம் !
நடிகர் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை விழாவிற்கு படக்குழுவினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லையா என ரசிகர்கள் புலம்பியுள்ளனர். தற்போது ரசிகர்கள் பார்வைக்காக இந்த இசை விழாவை நேரடியாக ஒளிபரப்ப சன்டிவி ஏற்பாடு செய்துள்ளது. ’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா டிரைலர் ஒன்றை சன் டிவி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இன்று படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகும் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. “வாத்தியாரு” வராரு என்ற ஹாஷ் டேக் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது