பாலாவின் ‘வணங்கான்’வேற லெவல் டிரைலர்..நடிகர் அருண் விஜய்க்கு நிச்சயம் வெற்றி உண்டு ..

July 9, 2024 at 12:31 pm
pc

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவான ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாலாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் டிரைலரில் உள்ள காட்சிகள் அவரது முந்தைய படத்தில் உள்ள காட்சிகளை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது. குறிப்பாக அருண் விஜய்யின் கேரக்டர் ‘பிதாமகன்’ விக்ரம் கேரக்டர் போல் உள்ளது என்பதும் பல காட்சிகள் அவருடைய ஸ்டைலில் தான் படமாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது. .குறிப்பாக அதீத வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஏன்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அதே நேரத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டவர்களிடம் பாலா நன்றாக வேலை வாங்கி உள்ளார் என்பது ஒவ்வொரு ஷாட்டில் இருந்து தெரிகிறது. நீதிபதி கேரக்டரில் நடித்துள்ள மிஷ்கின் நடிப்பு அபாரமாக உள்ளது. சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக உள்ளனர்.

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை அசத்த வைக்கும் வகையில் உள்ளது என்பதும் குருதேவ் கேமரா மிரள வைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பாலாவின் ஸ்டைலில் இன்னொரு திரைப்படம் உருவாகி உள்ள நிலையில் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ட்ரெய்லரில் இருந்து யூகிக்க முடியவில்லை என்றாலும் நிச்சயம் ஒரு வித்தியாசமான கதையை தான் அவர் சொல்லி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website