22 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வை பதிவிட்ட டி இமான்-இணையத்தில் வேற லெவல் வைரல்…




நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல இசையமைப்பாளர் டி இமான் தன்னுடைய இசையில் அவர் முதன்முதலாக பாடிய பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார்.
முன்னாள் உலக அழகி ஆன பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நாயகியாக நடித்தது மட்டுமின்றி விஜய்யுடன் சேர்ந்து ’உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலையும் பாடினார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் டி இமான், ’தமிழன்’ படத்திற்காக விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா பாடிய போது எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்
22 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பாடிய பாடலை கம்போஸ் செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் டி இமான் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.