மக்களே உஷார்!! ரேபிட்டோ, ஓலா ஓட்டுபவர்களை குறிவைத்து புதுவிதமான மோசடி..
ரேபிட்டோ, ஓலா உள்ளிட்ட ஆன்லைன் வாகன சேவைகளில் பைக் டாக்ஸி ஓட்டுபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் நூதனமாக பணம் பறித்து வருவதாக பைக் டாக்சி ஓட்டுநர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வெளியான வீடியோவில், ”எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம். ஒரு பெரிய ஸ்கேம் நடந்திருக்கிறது. ஏதோ ஒரு லொகேஷனுக்கு வண்டியை புக் பண்ணிட்டு அங்கு சென்ற பிறகு என்னுடைய சிஸ்டர் வராங்க அவர்களை இந்த இடத்தில் ட்ராப் பண்ணனும் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்திற்கு போவதற்கு முன்னாடி நான் ஜி-பேயில் உங்களுக்கு 3000 ரூபாய் அனுப்பி வைக்கிறேன். அவர்களிடம் ஜி-பே கிடையாது, கார்டும் கிடையாது. நீங்க அவங்கள அங்க இறக்கி விட்டுட்டு ஏடிஎம்ல காசு எடுத்து கொடுத்துடுங்க என்று கேட்கிறார்கள்.
சரி என்று நாம் சொன்னவுடனே நம்மிடம் போலியாக கிரெடிட் ஆன மாதிரி ஒரு மெசேஜை காட்டிவிட்டு, உடனே என்னுடைய சிஸ்டர் இப்பொழுது வரவில்லை எனவே நான் கொடுத்த காசை ரிட்டன் ஜி-பே பண்ணிடுங்க என சொல்கிறார்கள். இதில் விவரம் தெரியாத பலர் உடனே சம்பாதித்து வைத்த காசில் 3,000 ரூபாயை அவர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதேபோல தான் இன்று எனக்கும் நடந்தது. நானும் ரேபிட்டோ தான் ஓட்றேன்.
இந்த மாதிரி ஒருவர் சொல்லும் பொழுது எனக்கு ரொம்ப டவுட்டா இருந்தது. இதுகுறித்து என் கூட என்னை போலவே ரேபிட்டோ ஓட்டும் சக ஓட்டுநரிடம் கேட்டேன். அவரும் எனக்கும் இதேபோல் நடந்தது என்று தெரிவித்தார். உங்களுக்கும் இதுபோல் நடந்திருந்தால் கண்டிப்பாக இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள். உங்கள் சர்க்களில் யாராவது ரேபிட்டோ ஓட்டுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு இதை தெரியப்படுத்துங்கள். அவர்களும் ஜாக்கிரதையாக இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வெளியான நிலையில் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.