தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்.. அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் என்ன ரோல் தெரியுமா?

August 8, 2024 at 2:14 pm
pc

தனுஷ் கடைசியாக நடித்த ராயன் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஹிந்தி படத்திலும் நடிக்கவிருக்கும் அவர் இப்போது ஹாலிவுட் படத்தில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக சம்பவம் செய்யும் அவர் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கேப்டன் மில்லர் படத்தை விட்டார். தனுஷ் ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால்; போட்டியாக களமிறங்கிய அயலான் திரைப்படத்திடம் கேப்டன் மில்லர் தோற்றதுதான். இருந்தாலும் மில்லரில் விட்டதை ராயனில் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர் அவரது ரசிகர்கள்.

இயக்குநர் தனுஷ்: அதேபோல் தனுஷ் முதலில் இயக்கிய பவர்பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே ராயன் படத்திலும் இயக்குநராக தனுஷ் தனது முத்திரையை பதிப்பார் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். தன் தங்கையை அழித்தவர்களை தனுஷ் பழி வாங்குவதுதான் படத்தின் ஒன் லைன் ஆகும். சமீபத்தில் வெளியான ராயன் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். அதில் அனிகா, தனுஷின் உறவுக்கார பையன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் தனுஷின் முத்திரையை பதிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்த படங்கள்: தனுஷ் இப்போது குபேரா படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக், அருண் மாதேஸ்வரனுடன் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என அவரது கைவசம் பல படங்கள் இருக்கின்றன. இவை தவிர்த்து போர்த்தொழில் படத்தின் இயக்குநர் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

புதிய தகவல்: இந்நிலையில் தனுஷ் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி மார்வெல் ஸ்டூடியோஸின் படைப்பாக உலக அளவில் பிரபலமான அவெஞ்சர்ஸ் படத்திலிருந்து அடுத்ததாக அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படம் உருவாகிறது. இதனை ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்குகிறார்கள். இந்தப் படத்தில் தனுஷுக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதே படத்தில்தான் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கிறார் என்பதும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான தி க்ரே மேன் படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website