பெரும் அதிர்ச்சி!! நிலச்சரிவுக்கு பின் மீண்டும் வயநாட்டில் ஏற்பட்ட நில அதிர்வு… மக்கள் பீதி!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நென்மேனி பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்து. நென்மேனி பகுதியில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் கூறியதை அடுத்து வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வயநாடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏநபட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டைமலை ஆகிய கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதில் 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.