இன்ஸ்டாவில் காதல்.. காதலனை நம்பி காட்டுக்குள் போன இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர், இளைஞரை காதலித்த நிலையில் அந்த இளைஞரை நம்பி காட்டுக்குள் போன இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் காரணமாக பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் காதலிப்பது தற்போது பேஷனாக இருந்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அல்தாப் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்ட நிலையில் இந்த சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதன் பிறகு அல்தாப் அந்த இளம் பெண்ணை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. மதுபானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் போதையில் மயங்கிய இளம் பெண்ணை அல்தாப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
காட்டுப்பகுதியில் சத்தம் கேட்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அந்த இளம் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அல்தாப் மற்றும் அவரது கூட்டாளி என இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.