21 வயதில் அட்ஜெஸ்ட்மெண்ட்.. நடிகையின் குற்றச்சாட்டால் பதவி விலகிய பிரபல நடிகர்..!

மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை ஒருவர் தன்னை 21 வயதில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கட்டாயப்படுத்தியதாக நடிகர் ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அந்த நடிகர், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து மாநில அரசு ஹேமா கமிஷன் ஒன்றை அமைத்தது. இந்த கமிஷன் பல நடிகர், நடிகைகளிடம் விசாரணை செய்த நிலையில் சமீபத்தில் முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த அறிக்கையில் பல நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரபல மலையாள நடிகை ரேவதி சம்பத் என்பவர் கேரள மாநில திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு தன்னை வர சொன்னதாகவும் தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அப்போது தனக்கு 21 வயது என்றும் ஒரு மணி நேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகவும் நடிகை ரேவதி கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர் சித்திக், கேரள நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்து உள்ள நிலையில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.