தவெக கட்சியின் முதல் மாநாடு இங்குதான்: இடத்தை இறுதி செய்த தலைவர் விஜய்!

August 29, 2024 at 9:33 am
pc

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான இடத்தை கட்சித் தலைவர் விஜய் இறுதி செய்துள்ளார். தமிழ்நாட்டில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அதற்காக ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் தனது கட்சியின் கொடியை தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கு நடைபெறும் என்ற கேள்வி உலாவி வந்தது.

இந்த நிலையில், தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் சேர்ந்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கட்சியின் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டி பகுதியில் நடத்த அனுமதி அளிக்குமாறு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்க உள்ளனர். அடுத்த மாதம் 23ஆம் திகதி தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “மாநாடு குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார்” என கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website