அம்பானி வீட்டு திருமணத்திற்கு வர நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டாதா?

September 18, 2024 at 7:07 pm
pc

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு நடிகை பதில் அளித்துள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை வந்தனர். தமிழ் பிரபலங்களான ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பம், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, அட்லீ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதோடு, கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ள நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டாதா என்பதற்கு பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஆனந்த் அம்பானியும், ராதிகாவும் எனக்கு நண்பர்கள். இந்த காரணத்தினால் தான் திருமணத்திற்கு சென்றேன்.

ஏன் மக்கள் இவ்வாறு நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அங்கு என்ன நடந்தாலும் ஆனந்த் அம்பானியும், ராதிகாவும் ஒருவருக்கொருவர் அன்பாக பார்த்துக் கொண்டனர்.

அவர்களுக்குப் பின்னால் வயலின் வாசிப்பதைப் போல என் வாழ்க்கையிலும் வேண்டும் என்று நினைக்கிறேன்.

அங்கு என்ன நிகழ்ச்சிகள் நடந்தாலும் அனைவரையும் அன்புடன் வரவேற்றனர். அனைவரையும் நெருக்கமாக உணர வைப்பது அழகான பண்பு” என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website