சிவகார்த்திகேயன் நிறுவனம் பெயரில் மோசடி!
நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, தனது SK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக மற்ற சின்ன நடிகர்களின் படங்களை தயாரித்தும் வருகிறார். சமீபத்தில் சூரியின் கொட்டுக்காளி படத்தை அவர் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் SK புரொடக்ஷன்ஸ் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது பற்றி சிவகார்த்திகேயன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். “எங்கள் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.”
“இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.”
“சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக அபயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.