இதற்கெல்லாம் ஆதார் அட்டை செல்லாது: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!

October 26, 2024 at 8:14 pm
pc

தற்போதைய காலத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான சேவைகளுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஆதார் அட்டை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதாவது, ஆதார் அட்டையானது வயதை நிரூபிக்க சரியான ஆவணம் அல்ல என்று கூறியுள்ளது.

பொதுவாகவே நாம் முகவரிச் சான்று மற்றும் வயதுச் சான்றுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், 2015-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் இழப்பீடு வழங்கிய விவகாரத்தில் அவரது உறவினர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், “உயிரிழந்தவருக்கு ரூ.19.35 லட்சம் MACT இழப்பீடாக வழங்கியது. ஆனால் பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம், MACT அவருடைய வயதை தவறாக கணக்கிட்டுள்ளதாகக் கூறி, அந்த இழப்பீட்டு தொகையை ரூ. 9.22 லட்சமாக குறைத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், “ஒருவருடைய வயதை ஆதார் அட்டையின் அடிப்படையில் கணக்கீடு செய்ய கூடாது எனவும், அவரின் பள்ளி சான்றிதழை வைத்து தான் கணக்கீடு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

இறந்தவரின் ஆதார் அட்டையை நம்பி அவரது வயது 47 என உயர் நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளது. இதனால், ஆதார் அட்டையின் அடிப்படையில் இறந்தவரின் வயதை நிர்ணயம் செய்வதில் உயர்நீதிமன்றம் தவறு செய்துவிட்டதாக குடும்பத்தினர் வாதிட்டனர்.

ஏனெனில் அவரது பள்ளி விடுப்புச் சான்றிதழின்படி அவரது வயதைக் கணக்கிட்டால், இறக்கும் போது அவரது வயது 45 ஆக இருந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website