2025 உலகின் சிறந்த சுற்றுலா பயண இடங்கள்: பட்டியலில் 2ம் இடம் பிடித்த புதுச்சேரி!
2025ம் ஆண்டின் சிறந்த பயண இடங்களுக்கான லோன்லி பிளானெட்டின் (Lonely Planet) பட்டியலில் உலக அளவில் புதுச்சேரி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அமைதியான கடற்கரை நகரமான புதுச்சேரி, லோன்லி பிளானெட்டின்Lonely Planet) பிரபலமான 2025 சிறந்த பயண இடங்களின் பட்டியலில் இடம்பிடித்து இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியலில், உலகின் சிறந்த இடங்களை கொண்டாடும் வழக்கம் உள்ளது.
அந்த வகையில் இதில் டாப் இடங்களில் புதுச்சேரி 2ம் இடம் பிடித்துள்ளது. மேலும் புதுச்சேரி இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய இடமாகும்.
2025 சிறந்த பயண இடங்கள் பட்டியலில் 30 அற்புதமான இடங்களை நகரங்கள், நாடுகள் மற்றும் பகுதிகள் என வகைப்படுத்தி விரிவாக விளக்குகிறது.
பிரான்ஸின் துலூஸ்(Toulouse) நகரம் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், புதுச்சேரி இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகத் திகழ்கிறது.
லோன்லி பிளானெட்டின் கூற்றுப்படி, பிப்ரவரி மாதம் புதுச்சேரியைப் பார்வையிட சிறந்த நேரமாகும். குளிர்ந்த, வறண்ட காலநிலை சுற்றுலா, கடற்கரை ஓய்வு மற்றும் கலாச்சார மூழ்கலுக்கு ஏற்றதாக உள்ளது.
எனவே, நீங்கள் 2025-ம் ஆண்டுக்கான உங்கள் பயணத் திட்டத்தை திட்டமிட்டு வருமானால், புதுச்சேரிக்கு செல்லுங்கள்.
முன்னாள் பிரெஞ்சு காலனி நகரமான புதுச்சேரி தனது தனித்துவமான கவர்ச்சியையும் ஐரோப்பிய செல்வாக்கையும் இன்றும் தக்க வைத்துள்ளது.