கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் விக்ரமன் திருமணம்!
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் விக்ரமன். இந்நிகழ்ச்சிக்கு முன் விக்ரமன் சீரியல் கூட நடித்திருக்கிறார், ஆனால் அது கொடுக்காத ரீச் பிக்பாஸ் அவருக்கு கொடுத்திருந்தது. பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சர்ச்சைகளில் தான் அதிகம் சிக்கினார்.
அவர் ஒரு பெண்ணை ஏமாற்றி அவரிடம் இருந்து பண மோசடி செய்ததாக அந்த பெண் அவர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். பின் அந்த பிரச்சனை அப்படியே முடிவுக்கும் வந்தது.
இந்த நிலையில் விக்ரமன் குறித்து ஒரு சந்தோஷ செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் புகழ் நடிகர் விக்ரமனுக்கு திருமணம் முடிந்துள்ளது.
தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட அதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். பிக்பாஸ் பிரபலங்கள் ரச்சிதா மற்றும் ஷிவின் ஆகியோரும் விக்ரமன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.