விஜய்க்கு மாஸ்டர் படத்துல இவ்ளோ சம்பளமா ……
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான “தளபதி விஜய்” தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிவடைந்து விட்டது. டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக மோதுவதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக குட்டீஸ்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் பாட்டு பிடித்துள்ளது.
பிகில் படத்திற்கு ரூ.50கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் 2 படங்களின் வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.