கோட், வேட்டையனை விட அதிகம் வசூலித்த கங்குவா!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இருக்கும் கங்குவா படம் நேற்று ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. பெரிய எதிர்பார்ப்பில் தியேட்டர் சென்ற ரசிகர்கள் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாக படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். முதல் நாளில் ஹிந்தியில் மட்டும் கங்குவா படம் 4 கோடி ருபாய் கிராஸ் வசூல் வந்து இருக்கிறதாம்.
இது விஜய்யின் GOAT மற்றும் ரஜினியின் வேட்டையன் போன்ற படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கங்குவா pan இந்தியா ஹிட் ஆகும் என கூறி சூர்யா மற்றும் படக்குழுவினர் மும்பை உள்ளிட்ட பல இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தி இருந்த நிலையில் இந்த வசூல் மிக குறைவு தான் எனவும் ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் வரும் நாட்களில் வசூலில் பெரிய பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.