சூர்யா அடுத்து நடிக்க இருந்த 350 கோடி ரூபாய் பட்ஜெட் படம் டிராப்?

November 23, 2024 at 2:10 pm
pc

சூர்யா நடிப்பில் கங்குவா படம் கடந்த நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் pan இந்தியா ஹிட் ஆகும் என படக்குழு ஆந்திரா, மும்பை என பல இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்தனர். ஆனால் ரிலீஸ் ஆன முதல் நாளே வந்த விமர்சனங்களால் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. விமர்சனங்களை தொடர்ந்து 12 நிமிட காட்சியும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இருந்தும் படத்தின் வசூல் தொடர்ந்து டல் அடித்து கொண்டிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில் சூர்யா அடுத்து ஹிந்தியில் நடிக்க இருந்த கர்ணா படம் தற்போது கங்குவா ரெஸ்பான்ஸ் பார்த்து டிராப் செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மஹாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருந்தது. சூர்யாவின் முதல் ஹிந்தி படமாக கருதப்பட்ட இந்த படம் தற்போது கைவிடப்பட இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website