திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை…காரணத்தை வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

November 23, 2024 at 7:24 pm
pc

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் குறித்த பகிர்ந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லட்சுமி

தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தழிழில் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆப் கொத்தா’ திரைப்படத்திலும், அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இவர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஹலோ மம்மி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. 

நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

திருமணம் வெளியிட்ட தகவல்

தனது வரவிருக்கும் படமான ஹலோ மம்மியை விளம்பரப்படுத்தும் ஒரு நேர்காணலில், 34 வயதான ஐஸ்வர்யா லட்சுமி தான் ஒருபோதும் திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “நான் இளமையாக இருந்தபோது, ​​​​நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கற்பனை செய்தேன்.

8, 10 மற்றும் 25 வயதில், என் தாயின் பக்தியால் ஈர்க்கப்பட்டு, குருவாயூர் கோவிலில் முடிச்சு போடுவதை நான் மிகவும் விரும்பினேன். 

ஆனால் வளர வளர, திருமணத்தின் மீதான எனது பார்வை மாறியது. “நான் பார்த்த வரையில், எனக்கு தெரிந்தவர்கள் திருமணம் செய்த பிறகு யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே மட்டுமே மகிழ்ச்சி ஆக இருக்கின்றனர். அந்த சிலர் மலையாளி அல்ல.அதனால் திருமணம் வேண்டாம் என நினைக்கிறேன்” என ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் மீதான தனது கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கின்றார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website