வில்லன் நடிகருக்கு 47 வயதில் திருமணம்..
வில்லன் நடிகர் சுப்பாராஜு திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சுப்பா ராஜு. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இதற்கமைய தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சமி, போக்கிரி, பில்லா ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படங்களில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி ரசிகர்களை தன்வசப்படுத்தியிருப்பார்.
இதனை தொடர்ந்து பிரமாண்ட செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவின் முறைப்பையனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பிரபலங்கள் திருமணம் செய்து வருகிறார்கள்.
அந்த வரிசையில், 47 வயதாகும் சுப்பா ராஜுன் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
திருமண புகைப்பட பதிவில், “இறுதியில் வென்றது” என்ற கேப்ஷன் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.