தங்கத்தில் மாலை, 8 லட்ச புடவை என திருநெல்வேலியை கலக்கிய நடிகர் வேல ராமமூர்த்தி பேத்தி திருமணம்!
தமிழ் திரையுலகில் வலம் வரும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் தான் வேல ராமமூர்த்தி. கிடாரி, கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலம் ஆனார்.
வேல ராமமூர்த்தியின் பேத்தியின் திருமணம் பற்றிய தகவல் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த திருமணத்தில் மணமகன் மற்றும் மருமகள் தங்கத்தால் ஆன மாலையை அணிந்துள்ளனர்.
திருமணத்திற்காக மணமகள் அணிந்திருந்த உடைகள் மட்டும் ரூ. 10 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. அதன்படி, மணமகளின் புடவை ரூ. 8 லட்சம் எனவும், அவர் அணிந்திருந்த பிளவுஸ் ரூ. 3 லட்சம் எனவும் கூறப்படுகிறது.
மணமகளுக்கு சீராக 300 சவரன் நகைகள் வழங்கப்பட்டதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறுகின்றனர்.