நடிகையாகும் ஆசையில் பொறியியல் படிப்பை கைவிட்டவர்… இன்று கூகிள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு
ஒரே ஆண்டில் 5 திரைப்படங்கள் உட்பட, மொத்தம் 12 திரைப்படங்களும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்கலும் நடித்தவர் இன்று கூகிள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் அமர்ந்துள்ளார்.
நடிகையாகும் ஆசையில்
மகாராஷ்டிரா மாகாணத்தில் பிறந்த முன்னாள் நடிகை Mayoori Kango என்பவரே, IIT Kanpur-ல் பொறியியல் படிப்பிற்கான வாய்ப்பு அமைந்தும் நடிகையாகும் ஆசையில், அதை உதறியவர்.
1995ல் நஸீம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான மயூரி காங்கோ, அதன் பின்னர் மொத்தம் 12 திரைப்படங்களில் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளார். ஒரே ஆண்டில் மட்டும் அவர் நடித்த 5 திரைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் ஆதரவையும் பெற்றது.
ஆனால் புகழுடன் இருக்கும் போதே 2003ல் காங்கோ துணிச்சலான முடிவொன்றை எடுத்தார். திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், தொடர்ந்து Aditya Dhillon என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
முதன்மையான பொறுப்பில்
அதன் பின்னர் கணவருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அமெரிக்காவில் வைத்தே பிரபலமான பருச் கல்லூரியில் மார்க்கெட்டிங் மற்றும் நிதித்துறையில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
2007ல் 360i என்ற நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். ஆண்டுகள் செல்ல, அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் மீடியாவில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். Resolution Media, Digitas, மற்றும் Zenith ஆகிய நிறுவனங்களிலும் முதன்மையான பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
2012 முதல் Zenith நிறுவனத்தில் பணியாற்றியுள்ள அவர், 2019ல் கூகிள் இந்தியா நிறுவனத்தில் முதன்மையான பொறுப்பில் இணைந்தார். வாழ்க்கையில் புதிய பாதையை துணிவுடன் தெரிவு செய்யும் எவருக்கும் மயூரியின் கதை உத்வேகம் அளிக்கும் என்பது உறுதி.