காமவெறியினால் கல்யாணமான ஆண்டியிடம் அத்து மீறிய 15 வயது சிறுவன்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி நகரில் உள்ள பெரியார் நகரில் வசித்து வரும் 29 வயதுடைய திருமணமான பெண் நேற்று இரவு உறங்குவதற்கு முன் வெளியில் சென்றிருந்த நிலையில், அப்போது, மறைந்திருந்து அந்த பெண்ணை நோட்டமிட்டுக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் பெண்ணை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இதனால் பயந்து அவனிடமிருந்து தப்பித்து ஓடிவீட்டிற்கு சென்று நடந்ததை தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரித்ததில், நடந்த சம்பவத்தை உறுதி செய்த பின்னர், அச்சிறுவனை கைது செய்த போலீசார் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, மேலும், ‘சிறுவர் சீர்திருத்த பள்ளி’யில் சிறுவனை ஒப்படைத்தனர். 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.