தட..புட.. ஏற்பாடுகள் முன்னணி நடிகரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து !!
திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பதிவுகள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். #washchallenge போன்றவற்றை செய்து வருகின்றனர்.
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரணின் பிறந்த நாள் வரும் மார்ச் 27ல் வருகிறது. தெலுங்கில் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாட முன் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரேம் சரணின் பதிவில், “கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக பொதுமக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. ஆகவே, இந்த ஆண்டு என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் ரசிகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காரியங்களிலும் ரசிகர்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு ராம் சரண் கூறியிருக்கிறார்.