அலர்டா இருங்க மக்களே….கொரோனா சூழலை பயன்படுத்தி அரங்கேறும் திருட்டுகள்….
கொரோனா வைரஸ் இது சீனாவின் உஹான் நகரில் பரவ தொடங்கி தற்போது அணைத்து உலக நாடுகளையும் ஒரு ஆட்டம் காண வைத்து வருகிறது.இதனால் பலர் பாதிக்கபட்டும் 20 000 மேற்பட்டோர் இதனால் உயிழந்து உள்ளனர்.அதுமட்டும் கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே உலக மக்களின் கவனம் முழுவதும் அதன் மேல்தான் இருக்கிறது.
இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் பணம் பறிக்கும் வேலையும் அதிக அளவிலான ஹேக்கிங் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஹேக்கிங் சம்பவங்களைத் தடுப்பதற்காக உலகளவில் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.
இந்தத் தன்னார்வலர்கள் குழுவில் இருப்பவர்கள், சைபர் பாதுகாப்புத் துறையில் நிபுணர்களாக இருப்பவர்கள். மேலும், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்களும் இந்தத் தன்னார்வலர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழவை COVID-19 CTI League என அடையாளப் படுத்துகின்றனர் குழுவினர். இதைக்கட்டான சூழலில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சைபர் பாதுகாப்புத் துறை கூறியுள்ளனர்.