தயவுசெய்து வதந்தியை பரப்பாதீங்க! Dr. சேதுராமன் இறப்பிற்கு பிறகு விளக்கம் கொடுத்த Dr. நண்பர்..
கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானார் சேதுராமன் (வயது 36). நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
36 வயதாகும் இவருக்கு சில வருடங்களுக்கு முன்னாள் தான் திருமணம் நடந்தது. தற்போது நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் சேதுவின் மரணம் பற்றி சிலர் வதந்தி பரப்பியுள்ளனர். அவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தான் இறந்தார் என வதந்தி பரவிய நிலையில் சேதுவின் நண்பர் அஸ்வின் விஜய் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். “Dr.சேதுராமன் மாரடைப்பால் தான் இறந்தார், கொரோனா வைரஸ் அல்ல. வதந்தி பரப்பாதீங்க” என அவர் தன இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஏன் 30 வருட நட்பு. இந்த உலகத்திற்காக பல நல்ல விஷயங்கள் செய்ய முடிவெடுத்திருந்தோம். நீ இப்போது சென்றுவிட்டாய்.. என் ஒரு பகுதியையும் எடுத்து சென்றுவிட்டாய் என வருத்தம் தெரிவித்தார்.
இந்த துயர செய்தியை கேட்டு பலர் அதிர்ந்துபோயுள்ளனர். சேதுராமனின் இறந்ததை நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் உறுதிபடுத்தி பதிவு செய்துள்ளார். சேதுவின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது அப்போது நடிகர் சந்தானம் சேதுவின் உடலை பார்த்து கண்கலங்கி நின்றார். மேலும் அவரது உடலை தோளில் தூக்கி சென்றார்.