‘குட்டி ஸ்டோரி பாடல் படைத்த புதிய சாதனை..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய்-க்கு தனது 64-வது திரைப்படமாக ‘மாஸ்டர்’ அமைந்துள்ளது. இத்திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகி இணையத்தில் செம வைரலானது, இன்றும் வைரலாகி கொண்டேதான் இருக்கிறது.
இதனையடுத்து, இந்த படத்தின் 2-வது சிங்கிள் ‘வாத்தி கம்மிங்’ பாடல் சமீபத்தில் வெளியானது. நம்ம சென்னை ஸ்லாங்கில் தாறுமாறான தர லோக்கல் பாடல் வரிகளுடன், செம குத்து பீட்டில் இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
தற்போது குட்டி ஸ்டோரி பாடல் சுமார் 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.