ஆண்களுக்கான கருத்தடை ஊசி கண்டுபிடிப்பு – உலகில் முதன்முறையாக இந்தியாவில்!!

உலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசி போடும் மருத்துவ பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவால் கண்டுபிடிக்க பட்ட இந்த கருத்தடை ஊசி எந்தவித பக்கவிளைவும் இன்றி 13 ஆண்டுகள் பயன் தரவல்லது. இது அறுவைசிகிச்சை எனப்படும் வாசக்டமி முறைக்கு மாற்றாக கண்டுபிடிக்க பட்டுள்ளது மூன்று கட்டங்களாக சுமார் 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 97.3% வெற்றிகரமாக முடிவு கிடைத்துள்ளது. இந்த கருத்தடை ஊசி ஆண்களுக்கான பாதுகாப்பான முறை என தைரியமாக அழைக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
ஆண் கருத்தடை சாதனம் குறித்த ஆராய்ச்சியை அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது ஆனால் அது ஆரம்ப நிலையிலேயே உள்ளது . இதேபோன்று பிரிட்டனில் உருவாக்கிய சாதனத்தில் பக்க விளைவு ஏற்பட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.