நித்தியானந்தா ஆசிரமத்தில் 18 வயது சிஷ்யை பகீர் வீடியோ..ஆசிரமத்தில் அப்படி என்னதான் நடக்கிறது .???
காந்திநகர்: “என் வயசு 18 .. நான் பத்திரமா இருக்கேன்..என்னை யாரும் கடத்தவில்லை” நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சர்ச்சைகளுக்கு எல்லாம் சளைத்துபோனவர் அல்ல இவர், இதுவரை எங்கே இருக்கிறார் என்று யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை . ஆனால், யூடியூப் வாயிலாக பக்தர்களுக்கு காட்சி தந்து அவர்களுடன் உரையாடி வருகிறார் நித்யானந்தா. எப்போதெல்லாம் இவர் காட்சி தருகிறாரோ, அப்போதெல்லாம் எதாவது ஒரு பகீர் குண்டை தூக்கி போட்டுவிட்டு போவார். அந்த பகீர், சர்ச்சையாக வெடித்து சிதறி, சின்னாபின்னமாக தொடங்கிவிடும்.
இந்நிலையில் இவர் ஆசிரமத்தில் உள்ள பெண் பக்தர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்று மிக வைரல் ஆகி உள்ளது .அதில் இவர் கூறுவது என்னவென்றால் ,நான் ஆசிரமத்தில் மிகவும் பத்திரமாக உள்ளேன் என்னை பற்றி, யாரும் கவலை பட வேண்டாம் . ஸ்வாமி என்னை அவரது மகள் போலவே கவனித்து வருகின்றார் .இங்கு உள்ள அனைவரும் என்னுடைய குடும்பத்தினர் போலவே உள்ளனர். என வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார் .
இதை அனைத்துமே பொய் என்று ஏற்று கொள்ளாத இவரின் பெற்றோர்கள் ,மகளை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் என்ற நிலையில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர் .புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ஸ்வாமி மடத்தில் உள்ள 2 பெண் நிர்வாகிகளை 6 பிரிவுகளின் வழக்கில் கைது செய்துள்ளனர் .